முகப்பு
தமிழ்நாடு

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதிய எழுச்சி: பழனிவேல் தியாகராஜன்

கல்விச் சிந்தனை அரங்கில் பழனிவேல் தியாகராஜன் பேசியது குறித்து...

Updated On : 3 மார்ச், 2026 at 4:41 PM
கல்விச் சிந்தனை அரங்கில் பழனிவேல் தியாகராஜன்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 4:37 PM

மத்திய அரசு கடன் வாங்கும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளதாக தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

இதில், புதுமையின் தாக்கம் - இந்தியாவில் தொழில்நுட்ப எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

Advertisement

''குஜராத்தில் வளர்ச்சி இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் தரத்திலும் பெரிய மாற்றம் நிகழவில்லை. ஆனால், தமிழகத்தில் அப்படி அல்ல. இங்கு நலத்திட்டங்களின் மூலம் மக்கள் வாழ்வில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

புத்தாக்க நிறுவனங்களில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

எனக்கு அமைச்சராக 10 ஆண்டுகள் அனுபவம் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. புள்ளி விவரங்களுடன் நலத் திட்டங்களின் பயன்கள் குறித்துப் பேச முடியும்.

மத்திய அரசு கடன் வாங்கும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டம் சாத்தியமில்லை எனக் கூறினர். ஆனால், அதனை திறம்பட செய்துகாட்டினோம். அரசியல் நிலைப்பாடு, சமூக நீதி போன்றவையே நாங்கள் மீண்டும் போட்டியிடுவதற்கான காரணம்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Tamil Nadu IT Minister Palanivel in ThinkEdu2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.