முகப்பு
தமிழ்நாடு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு!

கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு...

Updated On : 3 மார்ச், 2026 at 7:36 PM
கல்விச் சிந்தனை அரங்கின் இறுதியாக மைதிலி தாகூரின் இசை நிகழ்ச்சி... - dinmani online
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 9:29 AM

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு 2026 நிறைவடைந்தது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் (மார்ச் 2, 3) நடைபெற்ற இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசினர்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:31 AM

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கு ஏற்றி திங்கள்கிழமை (மார்ச் 2) கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

Advertisement

இரு நாள்கள் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், தமிழ்நாடு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், தெலங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, கர்நாடக உயர்கல்வி அமைச்சர் எம்.சி. சுதாகர், காங்கிரஸ் எம்பி சசி தரூர், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி கனிமொழி சோமு, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.

கருத்தரங்கின் நிறைவாக பிகார் பாஜக எம்.எல்.ஏ. மைதிலி தாகூரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் சந்த்வானா பட்டாச்சாா்யா, தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

summary

The New Indian Express Thinkedu conclave 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.