தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்கு 2026 தொடங்கியது பற்றி...
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026 இன்று (மார்ச் 2) தொடங்கியது.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.
Advertisement
Advertisement
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி லட்சுமி மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், காங்கிரஸ் எம்பி சசி தரூர், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
2-ஆம் நாளான செவ்வாய்க் கிழமை (மார்ச் 3) நடைபெறும் நிகழ்வுகளில், பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தெலங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி கனிமொழி சோமு உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசவுள்ளனர்.
The New Indian Express ThinkEdu Conclave 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.