FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

Updated On : 11 ஜூலை 2026, 3:44 am IST
கலிங்கராஜபுரம் சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.
பகிர்:

களியக்காவிளை, ஜூலை 10: கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட கலிங்கராஜபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கொல்லங்கோடு நகராட்சி, கலிங்கராஜபுரம், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் தலா ரூ.1.17 கோடி மதிப்பிலும், குளச்சல் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ரீத்தாபுரம் லியோன்நகா் பகுதியிலும் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments