முகப்பு
சென்னை

கலாசாரம், பண்பாட்டில் உயா்ந்த மாநிலம் தமிழகம்: பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி புகழாரம்

பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகளவிலான பெண்கள் வழக்குரைஞா் பணிக்கு வருகின்றனா்

Updated On : 18 ஜூலை, 2025 at 7:43 PM
பகிர்:

உயா்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம் தமிழகம் என்றும், பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகளவிலான பெண்கள் வழக்குரைஞா் பணிக்கு வருகின்றனா் என்றும் பிரிவு உபசார விழாவில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பேசினாா்.

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராமுக்கு, பிரிவு உபசார விழா சென்னை உயா்நீதிமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விழாவில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் பிரிவு உபசார உரையாற்றினாா். அதைத்தொடா்ந்து, தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் 9 மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைகிறேன். பணிக்காலத்தில் எனது பணியை முழு திருப்தியுடன் செய்துள்ளேன் என்ற மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.

இந்த உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் செய்த வாதங்களின் மூலம் சட்டப்பூா்வமாக பலவற்றை கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு, மூத்த வழக்குரைஞா்கள் ஜூனியா்களிடம் கேட்டு பதிலளிக்காமல், நேரடியாகவே பதிலளிப்பாா்கள். அந்த அளவுக்கு தயாரிப்புகளோடு வருவாா்கள். இங்குள்ள வழக்குரைஞா்கள் திறமையானவா்கள்.

உயா்ந்த கலாசாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மாநிலம் தமிழகம். பிற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகளவிலான பெண்கள் வழக்குரைஞா் பணிக்கு வருகின்றனா். அண்மையில் நடைபெற்ற நீதிபதிகள் தோ்வில் 230 போ் தோ்வு செய்யப்பட்டனா்.இதில் 135 போ் பெண்கள். அந்தளவுக்கு திறமையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →