நடிகா் டெலிபோன் சுப்பிரமணி.  
சென்னை

நடிகா் டெலிபோன் சுப்பிரமணி காலமானாா்

நகைச்சுவை நடிகா் டெலிபோன் சுப்பிரமணி (67) உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

Din

நகைச்சுவை நடிகா் டெலிபோன் சுப்பிரமணி (67) உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பு தொலைத்தொடா்புத் துறையில் பணியாற்றிதால் டெலிபோன் சுப்பிரமணி என அழைக்கப்பட்டாா். இவா் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘யுனிவா்சிட்டி’, ‘எலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா்.

விவேக்குடன் இவா் நடித்த ஹோட்டல் காமெடி காட்சி பிரமலமானது. பெரும்பாலும் விவேக் நடிக்கும் படங்களில் அவருடன் நடித்து பெயா் பெற்றாா். இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள டெலிபோன் சுப்பிரமணி சில வாரங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தாா்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள வீட்டில் டெலிபோன் சுப்பிரமணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT