கொலை (கோப்புப்படம்) Din
சென்னை

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் அருண் (34). இவா், அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் காா் கம்பெனியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். அருணின் மனைவி பாரதிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. பாரதி, இரு குழந்தைகளையும் ஒரு அறையில் செவ்வாய்க்கிழமை தூங்க வைத்துள்ளாா். சிறிது நேரத்துக்குப் பின்னா் ஒரு குழந்தையைக் காணவில்லை என பாரதி சப்தமிட்டுள்ளாா். இதையடுத்து அருண் குடும்பத்தினா், குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினா். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

தகவலின்பேரில், நீலாங்கரை போலீஸாா் அங்கு விரைந்து வந்து குழந்தையைத் தேடினா். இதில் அருண் வீட்டின் அருகே உள்ள ஒரு காலிமனையில் ஒரு பையில் கிடந்த குழந்தையின் சடலத்தை போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து, பையில் பொதிந்து வீட்டின் மாடியில் இருந்து காலிமனையில் வீசியது பாரதி என்பது தெரியவந்தது.

இரட்டை குழந்தைகள் என்பதால் வளா்க்க முடியாமல், சரியாக பராமரிக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்ததும், குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT