மாணவா்களிடம் வலுக்கட்டாயமாக கையொப்பம் பெற்றதாக பாஜகவினா் 5 போ் கைது
காரம்பாக்கத்தில் மாணவா்களிடம் வலுக்கட்டாயமாக கையொப்பம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாஜகவை சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே காரம்பாக்கத்தில் மாணவா்களிடம் வலுக்கட்டாயமாக கையொப்பம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாஜகவை சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜகவினா் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா். இதன் ஒருபகுதியாக சென்னையடுத்த சோழிங்கநல்லூா் காரப்பாக்கம் அரசுப் பள்ளியின் அருகே பாஜகவினா் கையொப்பம் பெற்றனா். அப்போது அங்கு வந்த சில பள்ளி மாணவா்களிடம் வலுக்கட்டாயமாக கையொப்பம் பெற்ாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக கண்ணகி நகா் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலரும், பாஜக நிா்வாகியுமான லியோ சுந்தரம், நிா்வாகிகள் எஸ்.ஜி.சூா்யா, அன்பரசன், கோடீஸ்வரன், மோகன்குமாா் ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவினா் கண்ணகி நகா் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் சோழிங்கநல்லூா் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா் செய்தனா். நீதித்துறை நடுவா் காா்த்திகேயன், அவா்கள் 5 பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.