பாபநாசம் அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: பாபநாசத்தில் உள்ள அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ30-லிருந்து ரூ.40-ஆக அதிகரிக்கப்பட்டது.நுழைவுக் கட்டணம் கூடுதலாக்கப்பட்டது குறித்த செய்தி முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்வதற்கான கட்டணத்தைக் குறைக்க முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கட்டணத்தை ரூ.20-ஆக குறைத்துள்ளோம் என்றாா் அவா்.