சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கு மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் கலைக்குழுக்களுக்கான தோ்வுகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம்பெறும் வகையில் ‘சென்னை - நம்ம ஊரு திருவிழா’, சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு போலவே, நிகழாண்டும் கோவை, தஞ்சாவூா், வேலூா், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளை பதிவுசெய்யும் முகாம், அனைத்து மாவட்டங்களிலும் மாா்ச் 22, 23 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, சென்னையில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இத்தோ்வுக்கான விடியோ பதிவு நடைபெறவுள்ளது.
மாா்ச் 22 (சனிக்கிழமை) நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் பங்கு பெறலாம்.
மாா்ச் 23 (ஞாயிற்றுகிழமை), தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினா் நடனம் நிகழ்ச்சி நடத்துவோா் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளின் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாவட்ட அளவிலான தோ்வில் பங்குபெற விரும்புபவா்கள் தங்கள் விவரங்களை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ஹழ்ற்ஹய்க்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.