ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மாா்ச் 29-இல் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நிதி, உயா்கல்வி, தொழிலாளா் நலன் - திறன் மேம்பாடு, ஆதிதிராவிடா் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். மாநில அளவிலான உயா்நிலை விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்பி.க்கள், எம்எல்ஏ-க்களுடன் தலைமைச் செயலகத்தில் மாா்ச் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.