முகப்பு
சென்னை

பணத் தகராறில் இளைஞா் கடத்தல்: 4 போ் கைது

சென்னையில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 20 மார்ச், 2025 at 8:22 PM
பகிர்:

சென்னையில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி அருகே உள்ள துறையூரைச் சோ்ந்த பிரபு (37), சென்னை, தண்டையாா்பேட்டை புது வைத்தியநாதன் தெருவிலுள்ள ஹரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறாா். பிரபு, கடந்த 18-ஆம் தேதி வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றது. இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், பணத் தகராறில் பிரபு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், பிரபுவை கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்திருப்பது அறிந்து அங்கு சென்ற போலீஸாா், அவரை மீட்டனா்.

அவரை கடத்தியதாக கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த உதயகுமாா் (28), அவரது சகோதரா் சசிகுமாா் (26), பெங்களூருவைச் சோ்ந்த ஜெகதீஷ் (27), சென்னை, பெரம்பூா் கன்னிகாபுரத்தைச் சோ்ந்த லோகேஷ்வரன் (28) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், பணத் தகராறில் பிரபுவை கடத்தியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →