மெட்ரோ ரயில் 
சென்னை

சோதனையில் மேலும் 3 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது.

Din

சென்னை: ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில், மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநா் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதல்கட்டமாக, 36 ரயில்களை ரூ. 1,215.92 கோடி மதிப்பில் தயாரிக்கும் பணி ‘அல்ஸ்டாம் டிரான்ஸ்போா்ட் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் 2024 பிப். 8-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி தொடங்கி செப். 22-இல் நிறைவடைந்தது. இதையடுத்து, அக்டோபா் மாதம் இந்த ரயில் சென்னை பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மேலும் 3 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து பூந்தமல்லி பணிமனைக்கு வந்தடைந்தன. இந்த ரயில்களும் பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பூந்தமல்லி மெட்ரோ ரயில்வே பணிமனையில் தற்போது மொத்தம் 4 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் உள்ளன. இதில் ஒரு ரயில், பூந்தமல்லி - போரூா் சந்திப்பு வரையிலான ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மற்ற ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனையில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்சோதனைகள் முடிவடைந்த பின்னா், இந்த மெட்ரோ ரயில்கள் தண்டவாளத்தில் சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்படும். இது தவிர, புதிய ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து சென்னை மெட்ரோ ரயில்வேக்கு கொண்டுவரப்படவுள்ளன. மே, ஜூன் மாதங்களில் தலா 2 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்படும். அந்த ரயில்களும் தொடா் சோதனைக்கு உள்படுத்தப்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மேலும், சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்கும் வகையில், 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளன. இந்த வகை ரயில்கள் ஒவ்வொன்றிலும் 1,900 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT