சென்னை

விடுதியில் தற்கொலைக்கு முயன்ற ஐஐடி மாணவி!

சென்னை ஐஐடி மாணவி ஒருவா் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடி மாணவி ஒருவா் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலம் கா்னூல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சிவகுமாரி (25). இவா், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து, சென்னை ஐஐடி-இல் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாகவே சிவகுமாரி கடும் மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவகுமாரி ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையின் குளியலறையில் உள்ள டெட்டாலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். பின்னா் தனது அறையில் தங்கியிருக்கும் சூா்யா என்ற பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக சிவகுமாரி ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம்! 7 பேர் பலி

மேட்டூர் அணை நிலவரம்!

விஜய்யின் ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: இன்று தீர்ப்பு!

SCROLL FOR NEXT