சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(நவ. 6) காலை வெய்யில் சுட்டெரித்த நிலையில், மாலையில் அம்பத்தூர், வடபழனி, தி.நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.