தமிழக அரசால் வழங்கப்படும் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோா் டிச. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படும். தமிழகத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் (சீருடைப் பணியாளா்கள் உள்பட) தலா மூவருக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
இந்த விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் பெறுவதற்கான
விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் டிச. 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.