த்ரிஷா 
சென்னை

நடிகை த்ரிஷா வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் நடிகை த்ரிஷா வீடு உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

 சென்னையில் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் மா.சுப்பிரமணியன், நடிகா் அஜித்குமாா் ஆகியோரது வீடுகள் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில், ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி வீடு, கிண்டியில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வீடு, ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகா் அஜித்குமாா் வீடு, சத்தியமூா்த்தி பவன், மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் வீடு உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் 10 இடங்களிலும் சோதனை நடத்தினா். சோதனையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியை பரப்பும் நோக்கில் வந்த மிரட்டல் மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT