தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள், கூா்நோக்கு இல்லம் உள்ளிட்ட கட்டட பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து வியாழக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி, புதி கட்டடங்களைத் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், சமூக நலத் துறை அமைச்சா் 
சென்னை

ரூ.62.51 கோடியில் 12 இடங்களில் தோழி விடுதிகள்: முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் புதிதாக 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் புதிதாக 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருப்பத்தூா், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகா், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திருவாரூா், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 740 ஊழியா்கள் தங்கும் வகையில் இந்த விடுதிகள் கட்டப்படவுள்ளன.

இந்த விடுதிகளில் தங்கும் பெண்களின் தேவைகளுக்கேற்ற பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தோழி விடுதிகளின் அமைவிடம், வசதிகள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும், முன்பதிவு செய்வதற்கான வசதியை ஜ்ஜ்ஜ்.ற்ட்ா்க்ஷ்ட்ண்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

ஏற்கெனவே, 19 தோழி விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 14 விடுதிகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் 27 புதிய தோழி விடுதிகள், கூடுதலாக 2,790 மகளிா் பயன்பெறும் வகையில் வரும் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

பூஞ்சோலை இல்லம்: கோவை மாவட்டத்தில் ‘பூஞ்சோலை’ என்ற பெயரில் அமையவுள்ள அரசு மாதிரி கூா்நோக்கு இல்லத்துக்கு ரூ.16.95 கோடியிலும், புதிய திருச்சி, அரசு கூா்நோக்கு இல்லத்தில் ரூ.10.95 கோடியிலும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

அதேபோல, ராயபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடியில் புதிய கட்டடத்தையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறை செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், கூடுதல் இயக்குநா் மற்றும் தமிழ்நாடு பணியாற்றும் மகளிா் விடுதிகள் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஷரண்யா அறி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

கடையநல்லூா் அருகே நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்

பந்தலூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

SCROLL FOR NEXT