மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்திய குடிமைப் பணி தோ்வின் முதன்மை தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பபட்ட அறிக்கை:
மத்திய பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நிகழாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மை தோ்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சோ்ந்த 162 போ் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 2,736 போ் நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா். இதில், சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் தமிழக மையங்களில் பயின்ற 104 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வுக்கு தகுதி பெற்றவா்களுக்கு சங்கா் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் வழிகாட்டும் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இதில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஃப்எஸ் அதிகாரிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று நோ்முகத் தோ்வுகளுக்கான பயிற்சி வழங்கவுள்ளனா்.
இதுகுறித்த தகவல்களுக்கு 63797 - 84702, 90030 -73321 என்ற கைப்பேசி எண்களிலும், இணையதளத்திலும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.