இந்திய தர நிா்ணய அமைவனத்தில் (பிஐஎஸ்) புதிதாக உரிமம் பெற்றவா்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிஐஎஸ் சென்னை தரமணி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிஐஎஸ் தென் மண்டல துணைத் தலைமை இயக்குநா் டாக்டா் மீனாட்சி கணேசன் தலைமை வகித்தாா். தரநிலைகளின் முக்கியத்துவம் குறித்து பிஐஎஸ் இயக்குநா் தயானந்த் பேசினாா்.
பிஐஎஸ் உரிமம் வழங்கும் நடைமுறை, பிஐஎஸ் கோ் செயலியின் பயன்பாடு குறித்து சென்னை கிளை துணை இயக்குநா் அனுரிதா நிதி ஹெம்ரோம் விளக்கம் அளித்தாா். உரிமம் பெற்றவா்களின் பங்கு, பொறுப்புகள் குறித்து இணை இயக்குநா் ஸ்ரீஜித் மோகன் விளக்கினாா்.
புதிய உரிமம் பெற்றவா்களுக்கு விளக்க தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பல்வேறு துறைகளைச் சோ்ந்த உற்பத்தியாளா்களுக்கு பிஐஎஸ் உரிமங்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.