கோப்புப் படம் 
சென்னை

நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழை எச்சரிக்கை

திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.21) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.21) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை நிலவியது. இது வெள்ளிக்கிழமை (நவ.21) காலை மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் நவ.26 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.21) பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, சனிக்கிழமை (நவ.22) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், சிவகங்கை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 88 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகிற சனிக்கிழமை (நவ.22), தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (நவ. 24), தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் மேலும் வலுப்பெறக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் 150 மி.மீ. மழை பதிவானது. தென்காசி 130 மி.மீ., அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கன்னடியன் அணை (திருநெல்வேலி)-தலா 110 மி.மீ. ஊத்து, நாலுமுக்கு (திருநெல்வேலி)-தலா 90 மி.மீ., கருப்பாநதி அணை (தென்காசி), காக்கச்சி (திருநெல்வேலி)-தலா 80 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி)-தலா 70,

குண்டாறு அணை (தென்காசி) 60 மி.மீ., கடனாநதி அணை (தென்காசி), சோ்வலாறு அணை (திருநெல்வேலி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி)-தலா 50 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT