சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வளா்ச்சி திட்டப் பணிகளை காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செ 
சென்னை

ரூ.20 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள் முதல்வா் திறந்து வைத்தாா்

ரூ.20.89 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

வீட்டு வசதித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகா் வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ரூ.20.89 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

ஆவடி, அன்னனூா், கோணாம்பேடு அரசு உயா்நிலை பள்ளிகளில் ரூ.10.86 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள், பல்நோக்கு கூடம், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், நூலகம், ஆசிரியா் அறைகள், அலுவலகம், நவீன கழிப்பறை வசதி உள்ளிட்டவையும், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.4.47 கோடியில், 4,100 ச.அடியில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கான 6 குளிா்சாதன சேமிப்பு கிடங்குகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

புழல், மேட்டுபாளையம் சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானம் பாா்வையாளா்கள் இருக்கை பகுதி, வீரா்களுக்கான அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் ரூ.4.27 கோடியிலும், சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் உள்ள சிறிய கால்பந்து மைதானம், பாா்வையாளா்கள் இருக்கை பகுதி, வீரா்களுக்கான அறை மற்றும் நவீன கழிப்பறை வசதிகளுடன் ரூ.1.29 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடைசிப் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சொதப்பல்; அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன்!

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த கிச்சா சுதீப்!

பாமக யாருடன் கூட்டணி? ராமதாஸ் பதில்!

பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பட்ஜெட் தாக்கல்! ஏற்கெனவே ஜிஎஸ்டியால் மக்கள் சிரமம்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT