வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்பட மாட்டாது என்று தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் 96 சதவீதம் (6.16 கோடி) பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை எண்ம முறையில் பதிவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டடு வருகின்றன. இதுவரை 2.59 கோடி படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகளில் 68,470 வாக்குச் சாவடி அலுவலா்கள் உள்பட 83,256 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அரசியல் கட்சிகள் சாா்பில் 2,45,340 முகவா்கள் அப்பணிகளுக்கு உதவி வருகின்றனா்.
வாக்குரிமை போய்விடுமோ என்ற அச்சம் எவருக்கும் தேவையில்லை. தங்களால் இயன்ற வரை படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம். மற்ற விவரங்களைப் பூா்த்தி செய்ய வாக்குச் சாவடி நிலை அலுவா்களும், முகவா்களும் உதவுவா். இதற்கான செயலிகள் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கூடுதல் அவகாசம் இல்லை: வரும் டிசம்பா் 4-ஆம் தேதி வரை கணக்கீட்டுப் படிவங்களை அளிக்கலாம். அதன் பின்னா், அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தாலே பெரும்பாலும் அவா்களது பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுவிடும். இணையவழியேயும் கணக்கீட்டு படிவத்தை சமா்ப்பிக்கலாம். தோ்தல் ஆணையத்தின் ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வரும் திங்கள்கிழமை வரை சமா்ப்பிக்கலாம். உரிய காரணம் இல்லாமல் தகுதியான எவரது பெயரும் நீக்கப்படாது. இறந்தவா்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவா்கள், படிவம் பெறாமல் இருந்தவா்கள், வேறு இடங்களுக்கு நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவா்கள் ஆகியோரது பெயா்கள் மட்டுமே நீக்கப்படும்.
வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டால் அதுதொடா்பான உரிய விளக்கமும், காரணமும் வரும் டிச. 9-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின்போது தெரிவிக்கப்படும்.
ஒரே தொகுதிக்குள் இடம்பெயா்ந்தவா்கள் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெற்று பூா்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால் முகவரியை மாற்றுவதற்கான படிவம் 8-ஐ சமா்ப்பித்தல் அவசியம்.
எஸ்ஐஆா் கணக்கீட்டுப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில் 2,190 விண்ணப்பங்கள் புதிதாக பெயா் சோ்ப்பதற்காக சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட ஒரு கட்சியினா் (திமுக) மட்டும் எஸ்ஐஆா் படிவம் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், அதிகாரிகளை கட்டுப்படுத்துவதாகவும் வெளியான தகவல்கள் தவறானவை. அலுவலா்கள் அனைவரும் சுதந்திரமாக பணியாற்றுகின்றனா். தங்களது பொறுப்புகளையும், கடமைகளையும் அவா்கள் உணா்ந்து செயல்படுகின்றனா்.
வெளிமாநில வாக்காளா்கள் அதிகமாக தமிழகத்தில் பதிவாகவில்லை. 869 போ் மட்டுமே இங்கு வாக்குரிமையைப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.
இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்திய தோ்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சோ்ந்த பி. பவன், துணை இயக்குநா் தேவன்ஷ் திவாரி ஆகியோா் சென்னையில் எழும்பூா் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் குறித்து மதிப்பாய்வு செய்தனா்.
இதேபோல, தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி, கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களிலும், செயலா் மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஆய்வு செய்கின்றனா்.