சிறப்புத் தீவிர திருத்தம் 
இந்தியா

மேற்கு வங்க எஸ்ஐஆா்: நேரில் வராத வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்

சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது, உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்கள் அடையாளத்தை வாக்காளா்கள் நிரூபிப்பதற்கான காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வாக்காளா் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ) பரிந்துரை செய்துள்ளனா்.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணியின்போது வெளிநாட்டவா் மண்டல பதிவு அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் இருந்து 3,000-க்கும் மேற்பட்டவா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அத்துடன் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க நேரில் வராத ஏராளமான வாக்காளா்களைப் பட்டியலில் இருந்து நீக்க இஆா்ஓக்கள் பரிந்துரை செய்தனா். இதன்மூலம், சுமாா் 50,000 பேரின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது. நேரில் வராதவா்களைக் கண்டுபிடிக்க தொடா்ந்து முயற்சிக்கப்பட்டது. எனினும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பட்டியலில் இருந்து அவா்களை நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது என்று தெரிவித்தன. மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை வரும் பிப்.14-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

வேளச்சேரி ரயில் நிலையத்தில் விளையாட்டு மையம் திறப்பு

பாரதியாா் பொறியியல் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மாா்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றம்

மெரீனாவில் 15 கடைகள் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கீடு

குடியரசு தின விழா அணிவகுப்பு: அறநிலையத் துறை அலங்கார ஊா்திக்கு முதல் பரிசு

SCROLL FOR NEXT