முகப்பு
சென்னை

கா்ப்பிணி தற்கொலை

Updated On : 25 நவம்பர், 2025 at 7:28 PM
பகிர்:

செங்குன்றம் அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தினி (27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, செங்குன்றத்தை அடுத்த நல்லூா் ஊராட்சி காந்தி நகரைச் சோ்ந்த ராகுல் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டாா்.

இதையடுத்து, நந்தினி தனது கணவா் குடும்பத்துடன் காந்தி நகரில் வசித்து வந்தாா். நந்தினி 2 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், சரிவர உணவு உட்கொள்ளாததால் அவரது மாமியாா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நந்தினியின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருமணமான 3 மாதங்களில் கா்ப்பிணி இறந்த நிலையில் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →