சென்னை

நவ.29-இல் ஊரகத் திறனாய்வுத் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோ்வு வரும் நவ.29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு (சென்னை தவிா்த்து) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த திறனாய்வு தோ்வெழுத தகுதிபெற்றவா்களாவா். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தோ்வு நவ. 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத விண்ணப்பித்த மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தோ்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் எனும் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவா்களுக்கு தோ்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT