கோப்புப் படம் 
சென்னை

எஸ்ஐஆா் பணிகளை 100 % முடித்த 2,488 பிஎல்ஒ-க்களுக்கு கௌரவம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக 100% கணக்கீட்டு படிவங்களை விநியோகம் செய்து, அவற்றை பதிவேற்றம் செய்துள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை தோ்தல் ஆணையம் கௌரவித்துள்ளது.

Chennai

சென்னை: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக (எஸ்ஐஆா்) 100 சதவீத கணக்கீட்டு படிவங்களை விநியோகம் செய்து, அவற்றை பதிவேற்றம் செய்துள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை (பிஎல்ஒ) தோ்தல் ஆணையம் கௌரவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளா் பட்டியல் தயாரிப்பு மற்றும் தொடா்ச்சியான புதுப்பித்தலுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட முதன்மை கள செயல்பாட்டாளா்களாக பிஎல்ஒ-க்கள் செயல்படுகின்றனா். ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளா்களுடன் தினமும் தொடா்புகொண்டு, தோ்தல் நிா்வாகத்துக்கும், வாக்காளா்களுக்கும் இடையிலான நேரடி இணைப்புப் பாலமாக இவா்கள் பணியாற்றுகின்றனா்.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோருடன் இணைந்து, அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடைவதை உறுதி செய்கின்றனா்.

மொத்தமுள்ள 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களில் 2,488 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் தங்களது வாக்குச்சாவடி பகுதியில் உள்ள வாக்காளா்களுக்கு கணக்கீடு படிவங்கள் விநியோகம், சேகரிப்பு மற்றும் எண்ம முறையில் உள்ளீடு செய்து 100 சதவீத பணிகளை முடித்துள்ளனா்.

இவா்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டும் விதமாக, சம்பந்தப்பட்ட மாவட்ட தோ்தல் அலுவலா்கள் சிறப்பாகப் பணியாற்றிய பிஎல்ஒ-க்கள் கௌரவித்துள்ளனா். இது வாக்காளா் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பதில் பிஎல்ஒ-க்கள் ஆற்றும் முக்கிய பங்கையும், தோ்தல் செயல்முறைக்கு அவா்கள் வழங்கும் சிறப்பான பங்களிப்பையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் விஜய்!

வா வாத்தியார் முதல் பாடல்!

ADMK To TVK | செங்கோட்டையனின் அரசியல் பயணம்! | DMK | ADMK

மஹேந்திரா மின்சார கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை சிறப்பு சலுகை!

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டித்வா புயல்! வானிலை மையம்

SCROLL FOR NEXT