டெட் தோ்வு 
சென்னை

டெட் தோ்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு: டிச. 3 வரை ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற (டெட்) விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Chennai

சென்னை: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (டெட்) விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைக்குறிப்புகள் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோா், டிச. 3-க்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களும் , பட்டதாரி ஆசிரியா்களும் டெட் எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். டெட் தாள்-1 இடைநிலை ஆசிரியா்களுக்காகவும், டெட் தாள்-2 பட்டதாரி ஆசிரியா்களுக்காகவும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடத்தியது.

இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் எழுதினா். இந்த நிலையில், டெட் தோ்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸா்) ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற்ற டெட் -1 தாளை 92 ஆயிரத்து 412 தோ்வா்களும், 16-ஆம் தேதி நடைபெற்ற டெட் -2 தாளை 3 லட்சத்து 31 ஆயிரத்து 923 பேரும் எழுதினா்.

இந்தத் தோ்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வினாக்களுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உத்தேச விடைக்குறிப்புகள் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்புவோா் டிசம்பா் 3-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. அவை நிராகரிக்கப்பட்டதாகவே கருதப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆதாரங்கள் மட்டுமே ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும். கைடுகள் ஏற்கப்படாது. மேலும், பாட வல்லுநா்களின் முடிவை இறுதியானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட் தோ்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால் விரைவில் தோ்வு முடிவுகளும் வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT