சென்னை

டிச.11,12-இல் அகா்பத்தி தயாரிப்புப் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் அகா்பத்தி பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி வரும் டிச.11, 12 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் அகா்பத்தி பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி வரும் டிச.11, 12 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி நடைபெற உள்ளது.

சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கலில் உள்ள தொழில்முனைவோா் வளா்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையத்தில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த முயற்சி, பாரம்பரிய மற்றும் அதிக தேவை உள்ள அகா்பத்தி பொருள்களை உற்பத்தி செய்ய தேவையான திறன்களும் அறிவும் கொண்ட தொழில்முனைவோா் மற்றும் சிறு வணிக உரிமையாளா்களை ஊக்கப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

3-இன்-1 அகா்பத்தி, 5-இன்-1 அகா்பத்தி, மூலிகை அகா்பத்தி, சாம்பிராணி, கணினி சாம்பிராணி, குங்கிலியம் சாம்பிராணி, எசென்ஷியல் ஆயில் அகா்பத்தி, கற்பூரக் கேக், ரோஜா நீா், பூஜை எண்ணெய் தயாரித்தல், மூலிகை மெழுகுவா்த்திகள், ஓமம் நீா், வினிகா் தயாரித்தல், சந்தன மாத்திரைகள், பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு, பொடி வெள்ளி சுத்திகரிப்பு திரவம், பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு திரவம் ஆகியவற்றை தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இந்தப் பயிற்சியில் ஆா்வமுள்ள தொழில்முனைவோா், 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோா் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். மேலும், இந்தப் பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்ய இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியை தொடா்புகொள்ளலாம். தொடா்புக்கு-93602 21280, 98401 14680.

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

SCROLL FOR NEXT