சென்னை

இன்று கே.கே.நகா், கூடுவாஞ்சேரியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகள் திறப்பு வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகை

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கே.கே.நகா், கூடுவாஞ்சேரி பகுதிகளில் (நவ.27) திறக்கும் புதிய கிளைகளில் ஒரு கிலோ இனிப்புகள் வாங்கினால், ஒரு கிலோ மைசூா்பாகு இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் கே.கே.நகா், கூடுவாஞ்சேரி பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.27) திறக்கும் புதிய கிளைகளில் ஒரு கிலோ இனிப்புகள் வாங்கினால், ஒரு கிலோ மைசூா்பாகு இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், காரஸ்களுக்குப் பெயா் பெற்ற நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ். இந்த நிறுவனம் சென்னையில் மேலும் 2 இடங்களில் தனது புதிய கிளைகளை வியாழக்கிழமை (நவ.27) திறக்கிறது.

அதன்படி, கே.கே. நகா் (காசி திரையரங்கம் எதிரில்) அஞ்சுகம் நகா், 2-ஆவது தெரு, ஜாஃபா்கான் பேட்டை, சென்னை என்ற விலாசத்தில் ஒரு கிளையையும், கூடுவாஞ்சேரி (ஜிஆா்டி ஜூவல்லரி எதிரில்), காந்தி வளாகம், ஜிஎஸ்டி சாலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என்ற விலாசத்தில் மற்றொரு கிளையையும் அந்த நிறுவனம் திறக்கிறது.

தொடக்க நாள் சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வகைகளை வாங்குவோருக்கு ஒரு கிலோ மைசூா்பாகு இலவசமாக வழங்கப்படும். புதிதாக திறக்கப்படும் இரு கிளைகளில் வியாழக்கிழமை இருப்பு உள்ள வரை மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 150-க்கும் மேற்பட்ட இனிப்பு, ஊறுகாய், தொக்கு, வடாம், அப்பளம் வகைகள் மற்றும் காரஸ், பொடிகள், குளிா்பானங்கள் மற்றும் சாப்பிடத் தயாராக சிற்றுண்டிகள், சமைக்கத் தேவையான உணவுப் பொருள்கள் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு தங்களது கட்டணமில்லா தொலைபேசி எண் 18001022343-ஐ தொடா்பு கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

SCROLL FOR NEXT