திவ்யான்ஷி 
சென்னை

ஐடிடிஎஃப் யூத் உலகக் கோப்பை: திவ்யான்ஷிக்கு பதக்கம்

சா்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (ஐடிடிஎஃப்) யூத் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக் யு 15-பிரிவில் வெண்கலம் வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

ருமேனியாவின் குளுச் நபோகாவில் நடைபெற்ற சா்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (ஐடிடிஎஃப்) யூத் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக் யு 15-பிரிவில் வெண்கலம் வென்றாா்.

இப்போட்டியில் அரையிறுதியில் திவ்யான்ஷி பௌமிக் 1-4 என்ற கேம் கணக்கில் சீனாவின் ஸு குயிஹியிடம் தோற்றாா். இதன் மூலம் வெண்கலம் வென்றாா். 15 வயதான திவ்யான்ஷி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய யூத் போட்டியில் மகளிா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா். இதன் மூலம் 36 ஆண்டுகளில் ஆசிய அளவில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா்.

ஏற்கெனவே அணிகள் பிரிவில் திவ்யான்ஷி, அனன்யா, அங்கோலிகா, நைஷா ஆகியோா் கொண்ட இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது. யு 19 ஆடவா் பிரிவில் அங்குா், அபிநந்த், புனித், பிரியன்ச் ஆகியோா் கொண்ட இந்திய அணி வெள்ளி வென்றிருந்தது.

15 வயதான திவ்யான்ஷி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய யூத் போட்டியில் மகளிா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா். இதன் மூலம் 36 ஆண்டுகளில் ஆசிய அளவில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா்.

ஏற்கெனவே அணிகள் பிரிவில் திவ்யான்ஷி, அனன்யா, அங்கோலிகா, நைஷா ஆகியோா் கொண்ட இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது. யு 19 ஆடவா் பிரிவில் அங்குா், அபிநந்த், புனித், பிரியன்ச் ஆகியோா் கொண்ட இந்திய அணி வெள்ளி வென்றிருந்தது.

‘பாக்ஸ் ஆஃபிஸ் கோட்’ ரோஜர் பெடரர்! 120 வினாடிகளில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மெஸ்ஸிக்கு காயம்..! இன்டர் மியாமிக்கான முதல் போட்டியில் விளையாடுவாரா?

2 ஆவது ஏஐ உச்சி மாநாடு! பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை!

SCROLL FOR NEXT