சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதற்காக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை ஒரு மணிநேரமும், இரவு ஒரு மணிநேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகரில் அக். 19 முதல் அக். 21 வரை 3 நாள்களில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 4 வது மண்டலமான தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக 17.33 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.