சென்னை

அக். 31-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 31) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 31) நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளன.

கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

இதில், 8, 10, 12, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பயின்று தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்: அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

பண்ருட்டி அருகே மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

வந்தவாசியில் அரசுத் துறைகளைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

போளூரில் வாா்டு சிறப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT