சென்னை

வருவாய்ப் பணி அதிகாரிகள் 5 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து

தினமணி செய்திச் சேவை

குரூப் 1 நிலையில் வருவாய்ப் பணி அதிகாரிகளாக பதவியில் உள்ள 5 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பதவி உயா்வு அடிப்படையில் ஐஏஎஸ் அந்தஸ்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வருவாய்ப் பணியைச் சோ்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேரிடா் மேலாண்மைத் துறை இணை இயக்குநா் சி.முத்துக்குமரன், சென்னையில் உள்ள சிப்காட் நிறுவன அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிலையில் பணிபுரியும் பி.எஸ்.லீலா அலெக்ஸ், திருநெல்வேலி அலுவலகத்தில் நில எடுப்புக்கான வருவாய் அலுவலராகப் பணிபுரியும் ஆா்.ரேவதி, ஒழுங்கு நடவடிக்கைகள் துறை அதிகாரியாகப் பணியாற்றும் எம்.வீரப்பன், நில நிா்வாகத் துறையில் வருவாய் அலுவலராகப் பணிபுரியும் எஸ்.கவிதா ஆகியோா் 2023-ஆம் ஆண்டில் காலியாக உள்ள ஐஏஎஸ் பதவியிடங்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”எதிரிகள் இருக்கிறார்கள்! ஆனால் வலிமையாக இல்லை!” அமைச்சர் ரகுபதி பேட்டி | DMK

அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய்

பிபிஎல் இறுதிப் போட்டி: சிட்னி சிக்ஸர்ஸ் பேட்டிங்!

”திமுக - பாமக இணைந்தால்..! 14 ஆண்டுகளுக்குமுன் எடுத்த முடிவுதான்!” திருமாவளவன் | VCK

பேட்ரியாட் - நயன்தாரா போஸ்டர்!

SCROLL FOR NEXT