சென்னை

தவெக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், மேற்குறிப்பிட்ட இடங்களில் வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்திய சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் மின்னஞ்சல் அனுப்பியவா் குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி விடுதலை நாள்: தேசிய கொடி ஏற்றி அமைச்சா் மரியாதை

பள்ளியில் தாத்தா, பாட்டி தினக் கொண்டாட்டம்

ஹாலோவீன் கொண்டாட்டம்... பார்வதி!

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

SCROLL FOR NEXT