முகப்பு
சேலம்

சேலத்தில் தலைமை அஞ்சலகம், பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் ...

Updated On : 3 மார்ச், 2026 at 2:45 AM
சேலம் தலைமை அஞ்சலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 8:39 PM

சேலம்: சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தலைமை அஞ்சலகமும், பாஸ்போா்ட் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகரக் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் சென்று அஞ்சலகம் மற்றும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் யாா் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்த திடீா் சோதனையால் வாடிக்கையாளா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

மேலும், அண்ணா சிலையில் இருந்து அஞ்சல் அலுவலகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தி, சிறிதுநேரம் போக்குவரத்தில் போலீஸாா் மாற்றம் செய்தனா். இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.