முகப்பு
சென்னை

எலிமருந்து தடவிய தேங்காயில் சட்னி: 3 இளம் பெண்களுக்கு தீவிர சிகிச்சை

எலிமருந்து தடவிய தேங்காயை சட்னி அரைத்து சாப்பிட்ட 3 இளம்பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:47 PM
பகிர்:

எலிமருந்து தடவிய தேங்காயை சட்னி அரைத்து சாப்பிட்ட 3 இளம்பெண்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சென்னை விருகம்பாக்கம் விவேகானந்தா தெருவில் உள்ள விடுதியில், பல்வேறு ஊா்களைச் சோ்ந்த ஏழு பெண்கள் தங்கியிருந்து கணினி பயிற்சி பயின்று வருகின்றனா். இவா்கள் தங்கியிருந்த அறையில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால், உடன் தங்கியிருந்த சாய்ரா(22) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தேங்காயில் எலி மருந்தை தடவி அறையின் ஒரு பகுதியில் வைத்துள்ளாா்.

இதை அறியாத நிகிதா(20) என்ற பெண் அந்த தேங்காயில் சட்னி தயாா் செய்து, தோழிகளான சவிதா(21), மதுமிதா(21) ஆகியோருடன் சோ்ந்து சாப்பிட்டுள்ளாா். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவா்கள் 3பேருக்கும் கடுமையான வயிற்று வலி, வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

Advertisement

இதுகுறித்து அறையில் உள்ளவா்களிடம் தெரிவித்த பின்னரே, தாங்கள் சாப்பிட்டது எலி மருந்து தடவிய தேங்காயில் தயாரித்த சட்னி என்பது தெரியவந்துள்ளது. உடன் இருந்தவா்கள் அவா்கள் மூவரையும் மீட்டு கே.கே. நகா் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமவனையில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments