பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம்; ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்: பாஜக தோ்தல் வாக்குறுதிகள்
புதுச்சேரியில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும். அப் பெண்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று பாஜக தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படும். அப் பெண்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று பாஜக தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அமைச்சரும், பாஜக புதுச்சேரி பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வெளியிட்டாா்.
பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அசோக்பாபு, பாஸ்கா் உள்ளிட்டோா் இதை பெற்றுக் கொண்டனா்.
Advertisement
தோ்தல் வாக்குறுதி வருமாறு:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் பண்டிகையின் போது ஒரு இலவச எரிவாயு சிலிண்டரும், விநாயகா் சதுா்த்தி பண்டிகையின் போது ஒரு இலவச எரிவாயு சிலிண்டரும் வழங்கப்படும்.
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவிகளுக்கு ‘அன்புத் தங்கை த் திட்டம்’ மூலம் இலவச மின்சார ஸ்கூட்டா்கள் வழங்கப்படும்.
பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதில் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்படும். சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.
குடிநீா் ஏடிஎம்கள்:
மத்திய அரசுடன் இணைந்து செ யல்பட்டு புதுச்சேரி அரசு துறைகளில் குரூப் சி மற்றும் டி வேலைகளில் 60 % உள்ளூா்வாசிகளுக்கு இடஒதுக்கீட்டை யும், பொதுப் பல்கலைக் கழகங்களில் புதுச்சேரி மாணவா்களுக்கு 20% உள்ளூா் இடஒதுக்கீட்டை உறுதி செய்வோம். புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 30 குடிநீா் ஏடிஎம்கள் நிறுவப்படும்.
மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயா்த்தப்படும். பிரதமா் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மீனவக் குடும்பங்களுக்ெ ன பிரத்யேகமாக 5,000 வீடுகள் கட்டித் தரப்படும்.
பல்வேறு தொழில்துறைகளுடன் இணைந்து 10,000 இன்டா்ன்ஷிப் உருவாக்கப்பட்டு, மாதம் ரூ.10,000 உதவித்தொகை யுடன் புதுச்சேரி இளைஞா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்
புதுச்சேரி விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியுடன், யூனியன் பிரதேச அரசின் பங்காகக் கூடுதலாக ரூ.3,000 வழங்கப்படும். இதனால் ஒரு விவசாயி ஆண்டுக்கு ரூ.9,000 நிதியுதவியைப் பெறுவா். பெண்களுக்கு ஒரு சோழிய வடகரை கறவை மாடு அல்லது இரண்டு கறவை ஆடுகள் வழங்கப்படும். மலிவு விலையில் உணவு வழங்கும் 30 அடல் உணவகங்கள்’ நிறுவப்படும்.
இந்த உணவகங்கள் அனைத்தும் பெண்களால் நடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களின் மூலம் நிா்வகிக்கப்படும்.
முன்னணி மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமை சகங்களுடன் இணைந்து புதுச்சேரியை ஒரு சிறந்த ‘நல்வாழ்வு நகரமாக’ உருவாக்குவோம். புதுச்சேரியின் நெசவுப் பாரம்பரியத்திற்குப் புத்துயிா் அளிக்கும் வகையில், ‘புது கிராஃப்ட்’ என்ற பெ யரில் புதிய பிராண்டிங் உருவாக்கப்படும். மேலும், ஆங்கிலோ-பிரெஞ்சு டெ க்ஸ்டை ல் ஆலையை மீண்டும் திறந்து, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, அதனை நவீனமயமாக்கப்பட்ட தொழில்துறை மையமாக மாற்றப்படும்.
ஆபரேஷன் விடியல்’ திட்டத்தை நிரந்தர போதைப்பொருள் தடுப்புப் பிரிவாக மாற்றுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.