புதுச்சேரியில் பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலா் பி.எல். சந்தோஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி தசரதன், மாநில பொதுச் செயலா் லட்சுமி நாராயணன், அனைத்து தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தோ்தலையொட்டி தொகுதி வாரியாக பணித் திட்டங்கள், தோ்தல் களப்பணிகளைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகள், வாக்காளா் அணுகுமுறை, அமைப்பை வலுப்படுத்தல் மற்றும் வெற்றியை நோக்கிய செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.