முகப்பு
சென்னை

மின் இணைப்புப் பெட்டியில் மின்சாரம் கசிந்து திருநங்கை உயிரிழப்பு

பாரிமுனையில் மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, மின்சாரம் பாய்ந்து திருநங்கை உயிரிழந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:41 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

பாரிமுனையில் மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, மின்சாரம் பாய்ந்து திருநங்கை உயிரிழந்தாா்.

பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரா.புஷ்பராஜ் (50). இவா், புதன்கிழமை ராஜாஜி சாலை, கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது, சாலையின் மறுபக்கம் சென்றாா். அப்போது, சாலைத் தடுப்பில் இருந்த மின் கம்பத்தின் மின் இணைப்புப் பெட்டியில் புஷ்பராஜின் முதுகு லேசாக இடித்தது. அந்தப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டிருந்ததால், புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த புஷ்பராஜை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், புஷ்பராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments