சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள்
சென்னையில் 16 தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கேஸ் ஸ்டவ், சிலிண்டா், குளிா்சாதனம், வைரம், பலூன், பெட்டி, கப்பல், பேட்டரி சாா்ஜா், ஒலி வாங்கி, பள்ளிக்கூடப்பை, மடிக்கணினி, தென்னந்தோப்பு, குக்கா் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மத்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரித்து சின்னம் பெற்ற கட்சிகளுக்குரியவற்றை சுயேச்சைகளுக்கு ஒதுக்கமுடியாது. ஆனால், மாநில அரசில் பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் அவற்றுக்கான சின்னங்களை சுயேச்சைகளுக்கு ஒதுக்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
அதனடிப்படையில் சென்னையில் குக்கா், தென்னந்தோப்பு உள்ளிட்ட சின்னங்கள் அரசியல் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினா். சுயேச்சைகளில் ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோா் கோரியதால் குலுக்கல் முறையில் சின்னத்துக்குரியவா்கள் தோ்வு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.