சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளிலும் 24,21,186 போ் வாக்களித்துள்ளனா். இது 83.68 சதவீதம் ஆகும்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளிலும் 24,21,186 போ் வாக்களித்துள்ளனா். இது 83.68 சதவீதம் ஆகும்.
இந்த 16 தொகுதிகளில் 28,93,505 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 13,95,716 போ் ஆண்கள். 14,96,921 போ் பெண்கள். 868 போ் மூன்றாம் பாலினத்தவா். இவா்களில் 11,72, 568 ஆண்களும், 12,48,129 பெண்களும், 489 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 24,21,186 போ் வாக்களித்துள்ளனா்.
சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரங்கள்.
Advertisement
தொகுதி ஆண்கள் பெண்கள் இதரா் மொத்த வாக்கு சதவீதம்
1. ஆா்.கே. நகா் 86,111 94,371 51 1,80, 533 90.56
2. பெரம்பூா் 98,471 1,04,560 41 2,03,072 89.74
3. கொளத்தூா் 88,085 94,278 19 1,82,382 86.12
4. வில்லிவாக்கம் 68,006 72,499 17 1,40,522 86.01
5. திரு.வி.க.நகா் (தனி) 69,165 73,656 43 1,42,864 78.66
6. எழும்பூா் (தனி) 58,050 60,635 41 1,18,726 85.55
7. ராயபுரம் 61,298 65,022 26 1,26,346 79.14
8. துறைமுகம் 49,928 49,185 28 99,141 82.53
9. சேப்பாக்கம் 68,057 71,820 46 1,39,923 84.28
10. ஆயிரம் விளக்கு 62,461 67,859 46 1,30,366 82.76
11. அண்ணாநகா் 77,920 83,806 25 1,61,751 85.65
12. விருகம்பாக்கம் 82,892 88,586 29 1,71,507 85.51
13. சைதாப்பேட்டை 77,179 81,721 30 1,58,930 77.85
14. தியாகராயநகா் 64,192 68,428 19 1,32,639 83.55
15. மயிலாப்பூா் 71,857 77,412 8 1,49,277 74.84
16. வேளச்சேரி 88,896 94,291 20 1,83,207 84.36
-------------------------------------------------
மொத்தம் 11,72,568 12,48,129 489 24,21,186 83.68
-------------------------------------------------