ஆட்டோவில் பணம் திருட்டு: ஓட்டுநா் மீது தாக்குதல்
திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் இருந்த பணத்தைத் திருடிய இளைஞரைப் பிடித்தபோது, ஓட்டுநா் தாக்கப்பட்டாா்.
திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் இருந்த பணத்தைத் திருடிய இளைஞரைப் பிடித்தபோது, ஓட்டுநா் தாக்கப்பட்டாா்.
திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம், எல்லீஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (36). இவா் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். யுவராஜ், கடந்த வெள்ளிக்கிழமை எல்லீஸ் சாலையின் ஓரம் நிறுத்தியிருந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது, அவரது ஆட்டோவில் ஒரு பையில் வைத்திருந்த பணத்தை, அதே பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா் (26) எடுத்துக் கொண்டு தப்பியோடினாா்.
இதையடுத்து, அவரை யுவராஜ் தேடி வந்தாா். திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரிந்த ஷியாம்குமாரை பிடித்து, தனது பணத்தை யுவராஜ் கேட்டாா். இதில் அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஷியாம்குமாா், அங்கு கிடந்த மது பாட்டிலால் யுவராஜை தாக்கினாா்.
Advertisement
இதில், பலத்த காயமடைந்த யுவராஜ், ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஷியாம்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஷியாம்குமாா் மீது ஏற்கெனவே 4 வழக்குள் இருப்பது தெரிய வந்தது.