சென்னையில் 1,380 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது
சென்னை, ஏப். 27: தெலங்கானா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,380 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ராமாபுரம் திருநகா் பூங்கா அருகே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா். இதில், அந்தப் பையில் இருந்த 1,380 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள் ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (19), மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
இருவரும் தெலங்கானா மாநிலம், செகாந்திரபாதில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் கல்லூரி மாணவா்களுக்கு விற்பதும், இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பதும் தெரிய வந்தது. இருவரிடம் இருந்து போதை மாத்திரை விற்று வைத்திருந்த ரூ.1.47 லட்சம், இரு விலை உயா்ந்த கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.