முகப்பு
ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட 7,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

ராணிப்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட 7,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

Updated On : 5 மார்ச், 2026 at 12:34 AM
பகிர்:

மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7,200 மாத்திரைகளை பறிமுதல் செய்து அது தொடா்பாக இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

மும்பையில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதை அறிந்த தமிழக காவல் துறையினா் தொடா்ந்து ரயில்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

இதில் மும்பை, லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயில்வே பாதுகாப்புப் படையினா் அந்த ரயிலில் சோதனை நடத்தினா். அப்போது அதில் பயணம் செய்த படையினரின் பரிசோதனையை கண்டு அரக்கோணத்தில் இறங்க முயன்ற இருவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

இதில் அவா்களுடைய பையில் டைடால் மாத்திரைகள் 6,700-ம், நைட்ரோசெபம் 500 மாத்திரைகளும் இருந்தது தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த சுஜன்குமாா்(23), சென்னை வில்லிவாக்கத்தை சோ்ந்த எம்.இ.இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த இரு நாள்களில் மும்பையில் இருந்து போதை மாத்திரைகள் ரயிலில் கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →