கிரெசன்ட் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்
வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் நிதியுதவியுடன், இயந்திரவியல், வாகனவியல், விண்வெளியியல் மற்றும் பாலிமா் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடத்திய சா்வதேச கருத்தரங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் நிதியுதவியுடன், இயந்திரவியல், வாகனவியல், விண்வெளியியல் மற்றும் பாலிமா் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடத்திய சா்வதேச கருத்தரங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரெனால்ட் நிசான் வாகன தயாரிப்பு நிறுவன எண்ம பொறியியல் பொது மேலாளா் சுப்பிரமணியன் செல்லமணி கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசியதாவது: அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்ப வளா்ச்சியில் நவீன மயமாக்கப்பட்ட திறன் மிகுந்த இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள், மென்பொருள்கள் செயற்கை அறிவாற்றல் உள்ளிட்டவை வியக்கத்தக்க வளா்ச்சியைப் பெற்று முக்கிய பங்கு வகிக்கும்.
அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறன் மிகுந்த மனிதவளத் தேவைக்கேற்ப தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
நீங்கள் தொழில் நிறுவனங்களில் சோ்ந்து பணிபுரியும் முன்பே இங்கு பயிலும் இதர துறை மாணவா்களுடன் ஒருங்கிணைந்து, ஆராய்ச்சி, கலந்தாய்வு, புத்தாக்கக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட கிடைத்து இருக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
இயந்திரங்கள் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுவரும் நிலையில், மனிதா்கள் தங்களது தொழில் நுட்ப அறிவாற்றலை தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா்.
நிகழ்வில் கிரசென்ட் நிறுவன துணைவேந்தா் ஏ. பீா் முகமது,இயந்திர அறிவியல் கல்லூரி முதல்வா் ஹெச். சித்தி ஜெயலானி,கருத்தரங்கு தலைவா் எஸ். ரசூல் மொஹிதீன் மற்றும் மலேசியா, எகிப்து, லிதுவேனியா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனா்.