அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி: தமிழகம், கர்நாடகம் உள்பட 450 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம்ஐஎஸ்டி சாா்பில் அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி டாக்டா் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம்ஐஎஸ்டி சாா்பில் அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி டாக்டா் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 450 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். தொடா்ந்து 6-ஆவது மாதமாக நீச்சல் ரேங்கிங் போட்டி நடைபெறுகிறது. நீச்சல் வீரா்களின் செயல்திறன், தரவரிசையை மேம்படுத்த இப்போட்டி நடைபெறுகிறது.
வெற்றி பெறுவோா் பதக்கம், சான்றிதழ்களை 10-ஆவது மாத நிகழ்வின் போது பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.