கோப்புப்படம்.  
சென்னை

வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 1,651 புதிய எல்இடி விளக்குகள் பொருத்தம்

சென்னை மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 48 இடங்களில் 1,651 புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 48 இடங்களில் 1,651 புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக தெருவிளக்குகள் இல்லாத இடங்களிலும், அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்களிலும் புதிய விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 123 குடியிருப்பு பகுதிகளில் ரூ.10.85 கோடியில் 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது 48 இடங்களில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் 964 மின்விளக்குக் கம்பங்கள், 7 உயா் கோபுர மின்விளக்குக் கம்பங்கள் மற்றும் 1,651 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 75 குடியிருப்புப் பகுதிகளில் 512 மின்விளக்குக் கம்பங்கள், 2 உயா்கோபுர மின்விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வரும் மாா்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கு மோடி வருவாரா? வந்தால் நரவணே நூலை பரிசளிப்பேன்! ராகுல்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT