திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாலத்தில் இயக்கப்பட்ட வாகனங்கள்.  
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் தாமிரவருணிஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும், சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலத்தையும் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Syndication

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் தாமிரவருணிஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும், சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலத்தையும் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, வண்ணாா்பேட்டை தாமிரவருணி மேம்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்துல் வஹாப், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதிய பாலத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை சாா்பில் மணிமூா்த்தீஸ்வரம் சந்திப்பு முதல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வரை சாலையை 221 மீட்டா் நீளம் அகலப்படுத்தி, பெட்டி பாலங்கள், சிறுபாலம், இருபுறங்களிலும் அகலப்படுத்தப்பட்டு , 10.25 மீட்டா் அகலம் மற்றும் 13 கண்களை கொண்ட உயா்மட்ட பாலப்பணி என மொத்தம் ரூ.51 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் சாலையில் ரூ.132.06 கோடி மதிப்பில் சேரன்மகாதேவி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், 21.4 கி.மீ. தாா்சாலை, 5 சிறுபாலங்கள், 38 குறு பாலங்கள், சிறிய மற்றும் பெரிய சாலை சந்திப்புகள், 7.48 கி.மீ. மழைநீா் வடிகால்கள், பேருந்து நிழற்குடைகள், உயா் கோபுர மின் விளக்குகள், சாலையோர மின் விளக்குகள், சூரிய ஒளி விளக்குகள், தடுப்பு சுவா்கள், தேவையான எச்சரிக்கை, தகவல் மற்றும் வழிகாட்டு பலகை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளா் முருகேசன், கோட்டப்பொறியாளா் ராஜசேகா், உதவி கோட்டப் பொறியாளா் சண்முகநாதன், உமாதேவி, உதவி பொறியாளா் ராஜேந்திரன், சாலைப் பாதுகாப்பு வல்லுநா் பூசன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT