முகப்பு
சென்னை

பிப். 11 வரை வட வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 10:36 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடக்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வெள்ளிக்கிழமை (பிப். 6) முதல் பிப். 11-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

Advertisement

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 6) அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments